பயணிகள் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த போதிய டீசல் இல்லை என்ற காரணத்தினால், எதிர்வரும் திங்கள் (6) கிழமை முதல் சகல தனியார் பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
டீசலை பெற நாள் கணக்கில் வரிசையில்
கல்விப் பொது தராத சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள நாள் கணக்கில் வரிசைகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படும் என தெரிவித்த போதிலும் அதற்கான உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
காலக்கெடு விதித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இந்த வாரத்திற்குள் டீசல் வழங்குவதற்கான முன்னுரிமை வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கள் கிழமை முதல் சேவையில் இருந்து முற்றாக விலக போவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.