உலக வங்கி மற்றும் சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை (S&P Global Market Intelligence and Financial Services) ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் இலங்கை கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பிலேயே இவ்வாறு கொழும்பு துறைமுகம் இடம்பிடித்துள்ளது.
கொழும்பு துறைமுகம் எதிர்நோக்கும் சவால்
இதற்கமைய, கொழும்பு துறைமுகம் இந்திய பெருங்கடல் எல்லைக்குள் இருக்கும் துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும், உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 வது இடத்திலும் இலங்கை, கொழும்பு துறைமுகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் உலகில் பெறுமதியான கேந்திர மையத்தில் இருந்தாலும் பல்வேறு துறைமுகங்களின் செயல் திறனை ஒப்பிடும் போது நம்பகமான, நிலையான மற்றும் ஒப்பிடக் கூடிய அடிப்படைகள் இல்லாததே துறைமுகத்தின் முன்னேற்றத்தில் எதிர்நோக்கப்படும் முக்கிய சவால் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.