இந்தியாவிலும் சோலோகமி
‘சோலோகமி’ என்ற பெண்கள், தம்மை தாமே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு முதன்முறையாக இந்தியாவில் நிகழவிருக்கிறது.
குஜராத்தின் மேற்கு வதோதரா நகரில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த சுஸ்மா பிந்து என்ற 24 வயதான பெண்ணே இந்த புதிய கலாசாரத்தை பின்பற்றும் முதல் இந்திய பெண்ணாக மாறவிருக்கிறார்.
இந்து முறையில் ஊடுருவும் சோலோகமி
தங்களை, தாங்களே திருமணம் செய்து கொள்ளும் திருமணச் சடங்கு, கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் போக்காக உள்ளது.
அது தற்போது இந்தியாவையும் வந்தடைகிறது. இதன்படி கோயில் ஒன்றில் எதிர்வரும் ஜூன் 11 அன்று மாலை க்ஷமா பிந்து, தமது திருமணத்தின் பாரம்பரிய விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.
தமது திருமணத்தின்போது சிவப்பு நிற மணப்பெண் அலங்காரத்தில், கைகளில் மருதாணி சகிதம், மணமகள் புனித அக்னியைச் ஏழு சுற்றுகள் சுற்றிவருவார் என்று பிந்து தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான மஞ்சள் கலந்த எண்ணெய் மணப்பெண்ணின் மீது தடவப்படும் மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற சடங்குகள் முன்னதாகவே நடைபெறும்.
மாப்பிள்ளை இல்லாமல் தேனிலவு செல்லும் பிந்து
அத்துடன் திருமணத்திற்குப் பின்னர் அவர் இரண்டு வார கால தேனிலவுக்கு கோவா செல்லவிருக்கிறார். எனினும் இந்த அனைத்து கொண்டாட்டங்களிலும் இல்லாத ஒரே ஒரு அம்சம் ஒரு மாப்பிள்ளை மாத்திரமே.
இந்தநிலையில் தம்மை, தாமே திருமணம் செய்து கொள்வதன் மூலம், தன் வாழ்க்கையை சுய அன்பிற்காக அர்ப்பணிப்பதாக பிந்து கூறியுள்ளார்.
“சுய-திருமணம் என்பது உங்களுக்காக நீங்கள் இருப்பதற்கும், வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கும், நீங்கள் மிகவும் உயிருள்ள, அழகான மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியான ஒருவராக வளரவும், மலரவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிந்துவின் இந்த தீர்மானத்துக்கு அவரின் குடும்பத்தினர் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளனர். “நீ எப்பொழுதும் புதிதாக எதையாவது நினைக்கிறாய்” என்று அவருடைய தாய் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடகம், வாழ்க்கையாகிறது
தன்னைத்தானே “திருமணம் செய்துகொள்வது” என்ற எண்ணம், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர், செக்ஸ் எண்ட் தி சிட்டி என்ற மிகப் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை நாடகத் தொடரில் காட்டப்பட்டது.
பிந்துவின் தத்துவம்
இதனையடுத்து, இதுபோன்ற நூற்றுக்கணக்கான “திருமணங்கள்” நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அசாதாரணமான ஒரு நிகழ்வாக, 33 வயதான பிரேசிலிய மொடல் என்ற அழகியல்துறை பெண், தனது “திருமணத்திற்கு” மூன்று மாதங்களுக்குப் பின்னர் தன்னை, தானே “விவாகரத்து” செய்தமை அமைந்திருந்தது.
தன்னை, தானே திருமணம் செய்துக்கொள்ளும் முறை, “ஒரு வினோதமான மற்றும் சோகமான செயல்” என்று விமர்சித்தனர்.
சிலர் இது “நாட்பட்ட நாசீசிசம்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தநிலையில் . நீ தனியாக உலகிற்கு வந்தாய், உன்னை நீ தனியாக விட்டுவிடுகிறாய். அப்படியானால் உன்னை விட உன்னை யார் அதிகமாக நேசிக்க முடியும்? நீங்கள் விழுந்தால், உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும். என்பதே இந்திய பெண்ணான பிந்துவின் சொந்தக்கருத்தாக அமைந்துள்ளது.