அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இன்று இரண்டு பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் விக்கிரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை அரச தலைவர் மாளிகையில் வைத்து இன்று (07) முற்பகல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அவர்களுக்குரிய நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.