சிகப்பு மற்றும் வெள்ளை அரிசிகளுக்காக அரசாங்கம் நேற்றிரவு கட்டுப்பாட்டு விலையை அறிவித்ததன் காரணமாக ஹட்டனில் உள்ள சதோச கிளையில் அரிசியை கொள்வனவு செய்ய நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சதோசவில் ஒரு கிலோ அரிசி 210 ரூபாய்
சதோச கிளை ஒரு கிலோ சிகப்பு அரிசியை 210 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு விற்பனை செய்துள்ளதுடன் நுகர்வோருக்கு மூன்று கிலோ கிராம் கோதுமை மா, 500 கிராம் சீனி ஆகியவற்றையும் கிளை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
எனினும் வெள்ளை அரிசி சதோச கிளைக்கு கிடைக்கவில்லை என நுகர்வோர் கூறியுள்ளனர்.
சந்தைக்கு அரிசியை விநியோகிக்காத அரிசி ஆலை உரிமையாளர்கள்
அரசாங்கம் அரசி கட்டுப்பாட்டு விலையை அறிவித்ததை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில்லை எனவும் இதனால், வெள்ளை மற்றும் சிகப்பு அரிசியை 240 மற்றும் 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாகவும் ஹட்டன் நகர அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கேள்விக்கு ஏற்ற வகையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில்லை என்பதால், அதிக விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளதுடன் நுகர்வோர் அதிக விலை கொடுத்து அரிசியை கொள்வனவு செய்வதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.