பொருளாதார நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் குடிவரவு குடியகல்வு திணைகக்களத்தின் செயற்பாடு ஸ்தம்பித நிலையை அடைந்து வருகிறது.
வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் இளைஞர்களால் திணைக்களம் நிரம்பி வழிகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அவர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீதியில் செலவழிக்க வேண்டும் என்பதனால் மிகவும் கோபமாக அவர்கள் செயற்படுவதனை காண முடிகிறது. இதானால் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மக்கள் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
பல நாட்களாக அங்கு காத்திருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்படும் சந்தர்ப்பத்தில் கடவுச்சீட்டு வழங்க முடியாதென கூறுவதனால் மக்கள் மேலும் கோபமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடியவரவு குடியகல்வு திணைகக்களத்திற்கு வெளியே பரபரப்பான சூழலே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.