இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க குறிப்பிட்ட சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள்
இந்த திட்டத்திற்கமைய, பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்காக மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் அதிக எரிபொருள் சேமிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.