பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முதன்மை வர்த்தகர் தம்மிக்க பெரேரா சத்திய பிரமாணம் செய்துள்ளார்.
இன்று முற்பகல் நாடாளுமன்றில் அவர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே பதவியில் இருந்து விலகிய பசில் ராஜபக்சவின் வெற்றிடத்துக்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.