சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்களை சமஷ்டி பொதுச் சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சுவிஸில் ஏழு நாட்களில் 33108 புதிய தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு முதல் வாரத்தில் 24704 கொரோனா தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 34 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் சுமார் 20 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்த கோடை காலத்தில் சுவிஸில் மொத்த சனத்தொகையில் 15 வீதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.