கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றதான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிரத ஊழியர்கள் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் இந்த நாட்களில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளை தீர்க்க ரயில்வே அதிகாரிகள் தவறியதால், இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் காலை11.50 மணியளவில் காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தாமதமானதால் கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.