மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை இவ்வாறு கோருவது ஓர் தவறான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்படுவதானது, தனித்துவாழும் பெண்களுக்கும், மற்றும் யுவதிகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இது ஒரு பாரதூரமான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் ஜனாதிபதி கோட்டபாயவினால் யினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செயற்படாது, அரசியல் கட்சியொன்றின் அழுத்தத்திற்கமைய உள்வாங்கப்பட்டு செயற்பட்டு வருவதாகவும் தி.சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.