தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தனியார் பேருந்து சேவை
அத்துடன் நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலைகளில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியது.
எரிபொருள் வழங்க மறுப்பு
எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் சில பிரதேச பேருந்து சாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது. அத்துடன் சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.