40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவு
எரிபொருளை ஏற்றி வரும் கப்பலுக்கான உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வரும் மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மக்கள் இன்னமும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் எரிபொருள் பெற தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் கூட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் வருகையின் தாமதம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.