நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சூறையாடப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி குறித்த தரப்பினர் வன்முறையாக செயற்படக் கூடும்.
எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.