ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிகவும் கஷ்டப்படுத்திவிடும். ஏழரைச் சனியின் பாதிப்பை விடவும் அஷ்டமத்து சனி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவார்.
அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியதிகளைக் கடைப்பிடித்தால், பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
விநாயகர் வழிபாடு செய்யலாம். அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவலாம்.
சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
அன்னதானத்துக்கு உதவி செய்யலாம்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
தினமும் ராம நாமம் ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.