யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிவந்த உழவு இயந்திரமொன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில் மண்ணினை இன்றிரவு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்ட நிலையில்,வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களான மயூரன் மற்றும் மிகிர்சன் ஆகியோர் சுழிபுரம் பத்திரகாளி கோவில் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தினை மடக்கிப்பிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.