சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வதற்கு முன்னர், இலங்கை அதன் தற்போதைய குழப்ப நிலையில் இருந்து வெளிவர வேண்டும் என ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா பிராட்டிகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள முடியாது. எனவே அரசாங்கம் ஸ்திரப்படும் வரை, நிதியமைச்சர் இருக்கும் வரை, சர்வதேச நாணய நிதியடன் பேச யாரும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
CNBC செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்காது
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என சர்வதேச அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியர் டெபோரா பிராட்டிகம் தெரிவித்துள்ளார்.
தங்கள் பணம் திருப்பிச் செலுத்தப்படாது என்று அவர்கள் கருதும் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் அதன் நிதியை ஒழுங்காகப் பெறுவதற்கு அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வருவாய்கள் மற்றும் அவற்றின் செலவினங்கள் சிறப்பாக பொருந்துகின்றன என்பதை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முயற்சிக்கும் என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் உறுதியளிக்கும்
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்க முடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதுவும் கிடைக்கப்போவதில்லை எனவும், நெருக்கடி நிலவும் வரை இலங்கையால் தேவையானதை வழங்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் கடனை நிலையான நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இலங்கையின் கடனாளிகளிடமிருந்து சர்வதேச நாணய நிதியம் உறுதியளிக்கும் என்றும் அவர் கூறினார்.
அந்த உத்தரவாதங்கள் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தால் நாட்டிற்கான ஒரு திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது, என்று அவர் மேலும் கூறினார்.