கிளிநொச்சியில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான ஒரு தொகுதி யூரியா உரம் கிடைக்கபெற்றுள்ளதாகவும், அவற்றை உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு மெற்றிக் தொன் மாத்திரமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட அரச அதிபரின் முயற்சியின் பயனாக 222 .65 மெற்றிக் தொன் யூரியா கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழான விவசாயிகளுக்குரிய யூரியா உரம் இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட குறித்த உரம் கிளிநொச்சி கம நல சேவை நிலையத்தின் களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல சேவை நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது