மட்டுப்படுத்தும் வகையில் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து வசதிகளில் நிலவிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த ஜூன் 20ஆம் திகதி அரசாங்க ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானத்தை எடுத்திருந்தது.
இந்நிலையில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் நேற்று மீண்டும் அதன் ஒரு மாத காலத்தை நீடிக்கும் சுற்று நிருபத்தை அனுப்பியுள்ளார்.
அதேவேளை மேற்படி சுற்று நிருபத்தை சாதகமாக்கிக் கொண்டு கடமைக்கு வரக்கூடிய அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்காமல் விடுவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அதனூடாக அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க சில தினங்களில் பொது போக்குவரத்து சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என அமைச்சின் செயலாளர் கூறினார்.
எனவே அதனைக் கவனத்திற் கொண்டு ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட முடியாத பொது மக்களுக்கான சேவைகளை தேவையான அதிகாரிகளை கடமைக்கு அழைத்து மேற்கொள்வதற்கு இந்த சுற்று நிருபம் தடையாக அமையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.