ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
தேசியப்பட்டியல் வெற்றிடம்
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜிர நியமிகப்பட்டுள்ளார்