வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டு பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்று வன்புணர முயன்றுள்ளான். இதன்போது குறித்த வயோதிப பெண்ணமணி தப்பித்து சென்றுள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இன்றையதினம் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.