ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை தெரிவித்திருந்தனர். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”கடந்த ஜீலை 9ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பொலிஸ் விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சம்பவம் தொடர்பிலான 14 பேரை பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.
பொது மக்களின் உதவி
இந்நிலையில், இனங்காணப்பட்டவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இதற்கமைய, குறித்த 14 பேரைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718594950, 0718594929 அல்லது 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.