கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது தயாரிக்கப்பட்டு வந்த 22 வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய 22வது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த 22வது திருத்தத்தில் பல முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டன. இதனையடுத்தே அதனை நீக்கிவிட்டு அடுத்த அமைச்சரவையில் புதிய ஏற்பாடுகளுடன் திருத்தத்துக்கு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அனுமதி பெறப்படும் என்று அமைச்சர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அனைத்து கட்சிகளினதும் கருத்துக்கள் உள்வாங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வு
இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, தீர்வுகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பகிரங்கமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் முன்னைய காலத்தில் அனைத்து தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக தொடர்ந்தும் பேசி தீர்வுகள் காணப்படவேண்டும்.
இந்த பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல முடியாது என்றும் விஜயதாச தெரிவித்துள்ளார்