பர்மிங்ஹாம் பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற 4 இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நாளை (29) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
110 இலங்கை வீராங்கனைகள் உட்பட 72 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 5,054 வீராங்கனைகள் இந்த வருட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.