அமெரிக்காவில் நிறுவனம் ஒன்று உறங்குவதற்கு ஊதியம் வழங்குகின்றது. அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
கேஸ்பர் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம் கேஸ்பர் ஸ்லிப்பர்ஸ் என்ற பதவி வெற்றிடத்திற்காக ஆட் சேர்க்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
நன்றாக உறங்க கூடியவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பம் செய்ய முடியும் குறித்த நிறுவனத்தின்
காட்சியாறையில் மெத்தைகளின் மேல் உறங்குவது இவர்களது பிரதான பணி என்றால் நம்ப முடிகிறதா?
உண்மையில் இவர்களது பணி இந்த வகை மெத்தைகளில் உறங்குவது ஆகும் விழித்து எழுந்த பின்னர் இந்த மெத்தைகள் தொடர்பில் தங்களது அனுபவங்களை அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் வான்மை மிக்க உறங்குபவர் என்ற பதவி நிலை இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது எதிர்வரும் 11-ம் திகதி வரையில் இந்த பதவி வெற்றிடத்திற்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
இந்த பதவி வெற்றிடத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் உறங்குவதில் அசாத்திய திறனை கொண்டிருக்க வேண்டும்ஈ நீண்ட நேரம் உறங்க கூடியவர்களாக இருக்க வேண்டும் எதன் மீதும் உறங்க கூடிய ஆளுமை இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனஇ
மிக நன்றாக உறங்க கூடியவர்கள் தங்களது உறங்கும் திறனை டிக் டாக் வீடியோக்களாக பதிவு செய்து விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது