இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8 பேரையும் இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித் தவிப்பதாகவும் இதில் நான்கு பேர் சிறுவர்கள் எனவும் திடலில் தவிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் குறித்த விடயம் இரு நாட்டு கடற்படையினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்தியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று காலை 6.30 மணி வரையில் மீடகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



















