பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் காலை உணவில் சத்தான உணவை எதை சாப்பிடலாம் என்று பலருக்கும் தோன்றும். ஆனால், பலர் காலையிலேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள்.
இவை ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வேர்க்கடலை வெண்ணெய்
காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்துக் கொள்ளவும். அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும்.
ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி. புரோட்டீன் ஷேக் புரோட்டீன் ஷேக் எப்போதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். 25 கிராம் புரத தூள், பால், நறுக்க்கிய பழங்கள், பாதாம் மற்றும் பிஸ்தாவை எடுத்துக் கொள்ளவும்.
அதனோடு, ஆளி விதைகள் அல்லது சியா விதைகளையும் சேர்த்தினால் மேலும் அதிக ஆரோக்கியமான நாளுக்கு உத்தரவாதம் கொடுக்கலாம்.
மேலும், பாலில் புரத தூளை கலக்கவும். அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களை கலக்கினால் உங்கள் பவர் பூஸ்டர் தயாராக உள்ளது.\
உப்மா, ஆரோக்கியமான எடை இழப்பு உணவு பொருள் ஆகும். மேலும் இதில் இயற்கையாகவே குறைந்த கொழுப்புள்ள ரவை உள்ளது.
நல்ல கொழுப்பு உள்ளதால் நல்ல கொலஸ்ட்ராலுக்கு உதவுகிறது. ஆரோக்கியமான காலை உணவாக பாலுடன் சேர்த்து ஓட்ஸை உட்கொள்ளலாம்.
ஒரே இரவில் குளிர்ந்த பிறகு தயிர் அல்லது குளிர்ந்த பாலுடன் அவற்றை உட்கொள்ளலாம்.