மாத்தறையில் நில்வல ஆற்றில் குளிப்பதற்குச் சென்றவர்களில் நால்வர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிதிகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியும் இவர்கள், அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டநிலையில் குளிப்பதற்குச் சென்ற போதே காணாமல்போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















