முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
கட்சியின் யாப்பின் பிரகாரம் மைத்திரியை நீக்கும் திட்டம்
இந்த திட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பில் இருக்கும் சில ஷரத்துக்களின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்புக்கு அமைய அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால், அவருக்கு கட்சியின் தலைவர் பதவி உரித்தாகும்.
தலைவராக தெரிவு செய்யப்பட போகும் தென் பகுதியை சேர்ந்த பிரபலம்
எனினும் அரச தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், கட்சியின் தலைவர் பதவிக்கு யாப்பின் அடிப்படையில் மீண்டும் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த ஷரத்தை பயன்படுத்தியே மைத்திரியை நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, தென் மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை கட்சியின் தலைவராக தெரிவு செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.