ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுமன்னிப்பின்கீழ் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவுள்லதாக கூறப்படுகின்றது.
தான் சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கைதிகளை பார்வையிட்டு, சுகநலம் விசாரிப்பதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு சிறைச்சாலை செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதியை அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண விடுதலையை வழங்குவது குறித்து அரச தரப்பில் தற்போது ஆராயப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.