மின்சார சபையை மறுசீரமைப்பு செய்தற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்றைய தினம் (04-09-2022) கலந்துரையாடும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார சபையை மறுசீரமைக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவையும் சந்திக்கும் எனவும் அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.