தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட 321 வீடுகளை திறந்து வைத்தார். திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த 321 புதிய வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தோட்டனுத்து, அடியனுத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைத்து இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் நிரந்தர குடியிருப்பு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் தற்போது கருத்து நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது.