தற்போது வரையில் நீர் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள் எதிர்வரும் 2 மாதங்களில் நீர் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அமைச்சர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் துண்டிப்பு
மேலும், “இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் நீர் கட்டணம் செலுத்தாத சுமார் 21 000 இற்கும் அதிகமான நீர் விநியோகங்களை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக நீர் கட்டணங்களை செலுத்தாமல் இருக்கின்றார்கள்.
நீர் விநியோக துண்டிப்பிற்கு அனுமதி
அவர்கள் கட்டணம் செலுத்தாவிடின் நீர் விநியோகங்களை துண்டிப்பதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே சாதாரண பொதுமக்கள் நீர் கட்டணங்களை செலுத்தி எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உரிய நேரத்தில் நீர் கட்டணங்களை செலுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றேன்.
இல்லையெனின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.