மீண்டும் சம்பளத்தை உயர்த்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பள உயர்வு கோரிக்கை
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வாக ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களது சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் அதிபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளினால் நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
நாட்டு மக்களுக்கு வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. நாட்டு மக்களின் ஒரு பிரிவினரே ஆசிரியர்கள்.
சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு தொகையொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மேலும் ஆசிரியர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்து செலவு உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.