1,200 கோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருளுடன் ஈரானிய கப்பலொன்று நேற்று முன் தினம் (06.10.2022) கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கப்பல்
இதன்போது சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர், கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த விடயத்தை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் தகவல்
குறித்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையின் கப்பல் ஒன்றுக்கு மேலும் சரக்குகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இந்திய கடற்பரப்புக்கு புறப்பட்டபோதே இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.