உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம், குரூப் பயனர்கள் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை 512 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 பேரை இணைத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் குரூப்களில் 1024 பேரை சேர்த்துக் கொள்ளும் வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. உங்களது அக்கவுண்டிலும் புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள புதிதாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் குரூப்-இல் புதிதாக நபர்களை சேர்க்க முயற்சிக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் குரூப்-இல் எத்தனை பேரை சேர்த்துக் கொள்ள முடியும் என பார்க்கலாம். இந்த அம்சத்துடன் Pending Participants பெயரில் மற்றொரு வசதியை வழங்கி இருக்கிறது. இதில் குரூப் அட்மின்கள் எத்தனை பேர் குரூப்-இல் உள்ளனர் என்பதை பார்க்க வழி செய்கிறது. இவர்களை அட்மின்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கீகரிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.