யாழ்பபாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கட்டடத்தில் நிர்மான வேலையில் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 32 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மதுபான விருந்து ஒன்றில் கலந்துவிட்டு வந்த நபரே மேற்படி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விடுதியில் பணிபுரியும் 10 பணியாளர்களை பொலிசார் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.