அத்துருகிரிய – துனந்தஹேன பிரதேசத்தில் தண்ணீர் நிரம்பிய குவாரியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சம்பவத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பீப்பாய்களால் ஆன தெப்பத்தில் ஏற முயன்ற போது, அது கவிழ்ந்து இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















