அநுராதபுரத்தில் தனது தாயின் தங்கச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலி ஆகியவற்றைத் திருடிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அநுராதபுரம், விஜயபுர போதிக்கு அருகில் வசிக்கும் 35 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவது,
வீட்டின் தலையணை ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலி ஆகியவற்றை காணவில்லை என்று தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நகைகளின் நிறை மற்றும் பெறுமதி தமக்குத் தெரியாதெனவும் அந்த தாய் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட புதல்வனை அநுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.