பாரிஸின் புறநகர் பகுதியான சென்-எ-மார்ன் மாவட்டத்தில் அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு பெற அல்லது புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்த பல்லாயிர கணக்கான மக்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த நடவடிக்கைக்காக காத்திருந்த மக்களின் கோரிக்கை தற்போதே ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த 22ஆம் திகதி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பித்தவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
விண்ணப்பித்தவர்கள் நகர மண்டபங்களில் அதற்கான கையொப்பத்தையிட்டு ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நடவடிக்கையை இலகுபடுத்துவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல்களையும் , உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இயந்திரத்தையும் பொருத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைகள் செய்யப்பட்டு வந்ததமையினால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கோரோனா காலப்பகுதி என்பதனால் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் உள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த மக்களால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது வெளிநாடு பயணங்களை சாதாரணமாக மேற்கொள்ள முடியும் என்பதனால் மக்கள் கடவுசீட்டுகளை புதுப்பிக்கும் பணிகளை வேகப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுமுறையின் போது பயணங்களை திட்டமிட்டுள்ள மக்கள் கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிரமங்களை கருத்திக் கொண்டு தற்போது விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்பட்டு வருவதாகவும் விண்ணப்பித்தவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.