சுவிற்சர்லாந்து மோன்டி-பிளேரின் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டிச்சென்ற 43 வயது தாய் மற்றும் அவரோடு பயணம் செய்த 10 வயது மகள் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவசர சேவை பிரிவினர் விரைவாக செயல்பட்ட பொழுதிலும் இருவருவரையம் காப்பாற்ற முடியவில்லை என்று அவசர சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை அவர்களுடன் பயணித்த அவரின் மகன் மற்றும் மற்றுமொரு பயணி உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தனி வாகன விபத்து என்று அறியவருகிறது-வீதியின் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பல மீட்டர் தோற்றத்துக்கு தூக்கி எறியப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.