அநுராதபுரத்தில் ஞான அக்காவுக்கு பொலிஸாரின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதை பொருள் பாவனையாளர்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆண்கள் மாத்திரமின்றி பெண்களிடையேவும் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கு போதுமான பொலிஸ் அதிகாரிகள் இல்லை.
பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் போதை பொருளை கட்டுப்படுத்தாமல் ஞானக்காவுக்கு பாதுகபப்பு வழங்கி வருகின்றனர். இதனால் நாடு அழிவை நோக்கி பயணிபப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.