தெல்லிப்பளை நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
எனினும் வீட்டின் உரிமையாளர் நேற்றையதினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
திருட்டு சம்பவம்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பளை குற்ற தடுப்பு பொலிஸார், கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேகநபரை கைது செய்ததுடன், திருடப்பட்ட பொருள் மற்றும் விற்பனை செய்த இரண்டு பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது தொலைக்காட்சி பெட்டி, நீர் இறைக்கும் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதேவேளை சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் நிறைவு பெற்றதும் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.