புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இந்த புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட உள்ளதுடன், பன்னாடுகளிலும் புலம்பெய்ந்து வாழும் இலங்கையர்கள் நேரடியாக இந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று அரசாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இவ்வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.