சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபரை லக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல நடிகை ஒருவரிடமிருந்து நீல நிற மாணிக்க கல்லை மோசடியான முறையில் பெற்றுக்கொள் முயற்சித்தமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் நீல நிற மாணிக்க கல் மற்றும் சொகுசு காரொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மோசடி செயல்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாரியபொல, மினுவாங்கேட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை மஞ்சுளா குமாரி மற்றும் லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இணைந்து சுரங்கம் ஒன்றை நடத்துகின்றனர்.
குறித்த சுரங்கத்தில் காணப்பட்ட நீலக்கல்லை சந்தேகநபர் மோசடியான முறையில் எடுத்துச் செல்ல முற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
பொலிஸ் விசாரணையில் அவர் பல தொலைக்காட்சி நாடகங்களில் துணை நடிகராக இருந்தது தெரியவந்துள்ளது.
சுரங்கம் தோண்டுவதற்காக ஒப்பந்தம்
பிரபல நடிகை மஞ்சுளா குமாரி, லக்கல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுரங்கம் தோண்டுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பின்னர், வவுனியாவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் போன்று நடித்து மோசடியாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சந்தேகநபர் அந்த நீல நிற மாணிக்க கல்லை மோசடியான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சுரங்கத்தை நடத்தி வந்த மற்றைய பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நௌல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று (23) விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.