கிளிநொச்சியில் 24 வயதான இளம் குடும்பப் பெண்ணுடன் லண்டனிலிருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது 3 வயது ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மனவி மாயகியுள்ளதாக கணவர் கிராம அலுவலரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
கிராம அலுவலரிடம் முறைப்பாடு
அத்துடன் தனது குழந்தைக்கான பராமரிப்பு செலவை லண்டன் குடும்பஸ்தரிடமிருந்து பெற்றுத் தரும்படி கேட்டுள்ளாராம் கணவர். குறித்த இளம் பெண் பாலர் பாடசாலையில் ஆசியையாக பாணியாற்றி வந்துள்ளார்.
அதேவேளை லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான பெண்ணின் கணவர், இறுதி யுத்ததின் போது காயங்களுக்கு உள்ளானவர் என்றும் அதன் காரணமாக அவர் வேலைக்கு செல்ல முடியாது வீட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
தனது கணவனையும் பிள்ளையையும் மனவியே பராமரித்து வந்த நிலையில், லண்டன் குடும்பஸ்தர் தமக்கு உதவிகள் செய்ததாகவும் கணவன் கிராமஅலுவலருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாட்டை கொடுக்குமாறு கிராம அலுவலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குழந்தையை பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.