யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.
அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே குறித்த முதலை உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று காலை வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாகவும் அப்பகுதியால் செல்பவர்கள் அவதானத்துடன் செல்லுமாறும் ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.