கொழும்பில் பாக்கிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மும்மைபயிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில், பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நாளையுடன் 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதே தமது கோரிக்கை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் பலர் கலந்து கொண்டு பயங்கரவாதத்திற்கு தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் தெரிவித்துள்ளனர்.