கோவிட் தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் பின்பற்றுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றன. எனவே சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
மீண்டும் கட்டுப்பாடுகள்
கோவிட் தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
கோவிட் தொற்று நோயுடன் ஒப்பிடும் போது, இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.