பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிப்பிற்கான காரணம்
சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தி விமான சேவையினை வழமைக்கு கொண்டு வந்தமையும் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வீசா திட்டம்
ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் உக்ரைன் பிரஜைகளுக்கு பிரித்தானியாவில் குடியேறுவதற்கு மூன்று புதிய வீசா திட்டங்களை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பேர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து அதிகமாக குடிப்பெயர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.